தினமலர் என் பார்வை
மீண்டு வருவோம் கவலை வேண்டாம் முனைவர் சவுந்தர மகாதேவன், தமிழ்த்துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி, 9952140275 பேரிடர் பாரதத்தை அழுத்தினாலும் மீண்டு வருவோம் என்கிற நம்பிக்கை நம்முள் துளிர்க்கிறது. இந்தக் கொரோனா நாட்கள் நிறைய இழப்புகளையும், நிறைய இறப்புகளையும் உலகிற்கிற்குத் தந்து நம்மை வீட்டுக்குள் முடக்கினாலும் தண்ணீர் வாளிக்குள் அமிழ்த்திய பந்து எப்படி அமிழ்த்திய கரங்களைத் தள்ளிக்கொண்டு மேலே வருமோ அவ்வாறு மேலே வருவோம் என்கிற நம்பிக்கையையும் தந்திருக்கிறது. நம்பிக்கைதானே வாழ்க்கை: 1876 முதல் 1878 வரை தொடர்ந்த தாது வருஷத்துப் பஞ்சத்தாலும் அது தந்த பசிபட்டினியாலும் கொடிய நோயாலும் இந்தியாவில் ஐம்பதுலட்சம் மக்கள் இறந்தார்கள். 1900 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வறட்சியின் விளைவாய் உண்ண உணவில்லாமல் 3.25 மில்லியன் மக்கள் இறந்தார்கள். 1943 இல் வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சத்தாலும் தொற்றுநோயாலும் 3.5 மில்லியன் மக்கள் இறந்தார்கள். 2004 இல் நம் வாழ்நாளில் கண்டறியாத மிகப் பெரிய நிலநடுக்கத்தை இந்தியப் பெருங்கடலில் கண்டோம், ரிக்டர் அ...