Posts

Showing posts from March, 2019

தினமலர் என் பார்வைக் கட்டுரை: சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி

Image
மகிழ்ச்சி எனும் மலர்ச்சிப் பூ முனைவர் சவுந்தர மகாதேவன், தமிழ்த் துறைத் தலைவர் மற்றும் கலைப்புல முதன்மையர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி, 9952140275                  நாம் அணியும் எல்லாப் பொன்னகைகளையும் விடவும் அழகானது நம் முகம் சிந்தும் இனிமையான புன்னகை. மலர்ச்சியும் மகிழ்ச்சியும் நம் வாழ்நாளை வெகுவாக நீட்டிக்கிறது.  ஒவ்வொரு விடியலிலும் மகிழ்வலைகள் நம்முள் எழ என்ன செய்யவேண்டும்?  வெறுப்பை மறுத்துச் சிரிப்பை நம் உள்ளத்திற்குள் ஊற்ற என்ன செய்யவேண்டும்?  ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்து வாழ்பவனுக்கு அவன் மனம் அருவிபோல் பொங்கத்தான் செய்யும்.  அந்தந்த கணத்தை அனுபவித்து வாழ்பவனுக்கு இந்த வினாடி மட்டுமன்று எல்லா வினாடிகளும் அருமையானதுதான்.  வளர்ந்த செடியால் தொட்டியையும் துளைத்துக் கொண்டு மண்ணில் வேர்பரப்பமுடிகிறது.  சென்டிமீட்டர்களால் வளர்ந்ததாய் காட்டிக்கொண்டிருக்கும் நம்மால் அவ்வாறு ஏன் முடியவில்லை?  வேதனைப் பரப்பில் நம் வேர...

தினத்தந்தி நான்காம் பக்கக் கட்டுரை: சௌந்தர மகாதேவன்

Image
              புன்னகையால் புவியை நிரப்புங்கள் முனைவர் சவுந்தர மகாதேவன், தமிழ்த்துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி    யாருக்குத்தான் மகிழ்ச்சியாயிருக்கப் பிடிக்காது?  மணக்கும் மலர்களைப் போல் சிரிக்கும் முகங்கள் எப்போதும் அழகானவை. பிறந்த குழந்தையின் மாசுமருவற்ற சிரிப்பு, பொக்கை வாய் திறந்து பாட்டி தாத்தா சிரிக்கும் சிரிப்பு, வெளியூர் போய்விட்டு வீட்டுக்குள் நுழையும்போது கண்களை இடுக்கி மனைவி சிரிக்கும் சிரிப்பு.. இப்படி எத்தனை மத்தாப்புச் சிரிப்புகள் தினமும் நம்மைச் சுற்றி!  பின் நாம் ஏன் துக்கத்தைக் கக்கத்தில் தூக்கிக்கொண்டு திரியவேண்டும்? சிரிக்கும் நாளே நம் வாழ்வில் சிறந்தநாள்.  எப்போதும் ஓடிக்கொண்டேயிருக்கும் கடிகாரம் கூட நாம் நின்று ரசிக்கும்போது அழகாகத்தானிருக்கிறது. நாம் எதை ரசிக்கிறோம்?  விண்மீன்களை விட மகிழ்ச்சியும் மலர்ச்சியும் நிரம்பியவனின் உற்சாகமான கண்மீன்கள் அழகானவை.  நிறைவாக வாழ்வதும் நிறைய பேரை வாழவைப்பதும்தானே வாழ்க்கை!...