Posts

Showing posts from July, 2019

சுவாமி நெல்லையப்பர் திருக்கோவில் ஆனித்தேர்த்திருவிழா : பேராசிரியர் சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி

Image
சுவாமி நெல்லையப்பர் திருக்கோவில் ஆனித்தேர்த்திருவிழா                    வடம்பிடிக்க வாரிங்களா! பேராசிரியர் சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி என்ன தவம் செய்திருக்கிறோமோ தாமிரபரணிக்கரையில் வாழ! பஞ்சசபைகளிலே தாமிரசபையில் திருநெல்வேலியுறை செல்வராக ஈசன் அருள்பாலிக்கும் நெல்வேலிச் சீமையில் ஆனித்திருவிழா அழகுத் திருவிழா! தலவரலாறு மழை கொட்டுகிறது, வேதபட்டர் ஈசனுக்குத் திருவமுது படைக்க காயப்போட்டிருந்த நெல் நனையக்கூடாதே என்கிற எண்ணத்தில் ஈசனை வேண்ட நெல்வேலியிட்டு நெல்லைக் காத்ததால் நெல்வேலி என்ற பெயர் நெல்லைக்கு வந்தது. அதனால் அவருக்கு நெல்வேலிநாதர் என்ற பெயர் உண்டு. வேணு என்றால் மூங்கில், வேணுவனநாதர் என்றால் மூங்கில்வனத்தில் உறைபவர் என்கிற பொருள் உண்டு. வேய்முத்தநாதர் என்றும் சாலிவாடீசர் என்றும் அவர் அழைக்கப்படுகிறார். வடிவுடை காந்திமதித்தாயாரோடு நெல்லையம்பதியில் ஈசன் அருள்பாலிக்கிறார். மூன்றாம் திருமுறையாய் பக்தர்களால் போற்றப்படும் திருஞானசம்பந்தர் தேவாரம் “மருந்தவை மந்திரம்” எனத்தொடங்கி திருநெல்வேலி...