பேராசிரியர் முனைவர் ச.மகாதேவன்,தமிழ்த்துறைத்தலைவர்,சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,திருநெல்வேலி தன் குறிப்பு
பேராசிரியர்
முனைவர் ச.மகாதேவன்
9952140275
mahabarathi1974@gmail.com
10.04.1974
50
ம.சௌந்தரராஜன்
பொன்னழகி
50, மகா விஜி அன்பகம்,
கிரசண்ட் நகர்
கே.டி.சி நகர்
திருநெல்வேலி
627 011
பொன்னமராவதி
புதுக்கோட்டை மாவட்டம்
குறிப்பிடத்தக்க பணிகள்
இளைய தலைமுறையினரிடம் தமிழைப் பிழையில்லாமல் எழுதவும் பேசவும் 30 ஆண்டுகளாகப் பயிற்சி வழங்குவது.
கல்லூரி மாணவ மாணவியருக்குத் தமிழ் உணர்வை ஊட்டி அவர்களின் கவிதைகளைக் கடந்த ஒன்பதாண்டுகளாகக் கவிதைத் தொகுப்புகளாக (ஆறாம் விரல், மனத்துளி, கானல் மீன்கள், கவிப்புறா, இமைச் சிறை, காலநதி, பகல் நிலவு, வளர்பிறை, பாதைகள் பார்வைகள்) வெளியிட்டு அவர்களை ஊக்கப்படுத்துவது.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் + 1 சிறப்புத் தமிழ்ப் பாட நூலின் மேலாய்வாளராகப் பணியாற்றி (2018 ஆம் ஆண்டு) தற்போது அம் மாணவர்கள் படிக்கும் பாட நூலை உருவாக்கத் துணை புரிந்தது.
கேரள அரசு பொதுக் கல்வித் துறை 2024 ஆம் ஆண்டு வெளியிட்ட ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாட நூலின் வல்லுநராகப் பணியாற்றி அப்பாட நூலை வெளிக் கொண்டு வந்தது.
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் (2024 பிப்ரவரியில்) நடத்திய பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவில் மாவட்ட ஆட்சித் தலைவரோடு அமைப்புக் குழுவில் பணியாற்றி 780 பக்கங்கள் உள்ள நெல்லைச் சீமையின் நூற்றாண்டுச் சிறுகதைகள் நூலை உருவாக்கத் துணை புரிந்தது. அதில் இருளிலே தெரிவது எனும் சிறுகதை எழுதியது.
10ஆண்டுகளாக திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மாணவர் வாசகர் வட்டத்தை நடத்தி நூற்றுக்கணக்கான மாணவர்களைத் திறனாய்வாளராக மாற்றியது.
13 நூல்களை எழுதியது: சமூக சேவகர் பாலம் பா.கல்யாண சுந்தரம் வாழ்க்கை வரலாறு, மகாபாரதி இணையக் கவிதைகள், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் தண்ணீர் ஊசிகள், வண்ணதாசன், இறையருட் கவிமணி கா.அப்துல் கபூர், வாழ நினைத்தால் வாழலாம் (திருக்குறள் சார்ந்த தன்னம்பிக்கைக் கட்டுரைகள்), திருநெல்வேலி நினைவுகள், பணி வாய்ப்புத் தமிழ், இணையத் தமிழ், மதிப்பீட்டுக் கல்வி, காலத்தின் குரல் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குத் தமிழுணர்வை ஊட்டுவதற்காக விவாத அரங்கம், சொற்பொழிவு, பட்டிமன்றம், கவியரங்கம் என 500 நிகழ்ச்சிகளில் உரைகள் வழங்கியுள்ளார்.
புதுடெல்லி சாகித்ய அகாதமியின் தேர்வுக் குழு உறுப்பினராகப் (2021) பணியாற்றியுள்ளார்.
சாகித்ய அகாதெமி சார்பில் உரையரங்குகளை நடத்தியுள்ளார். திறனாய்வுரைகளை வழங்கியுள்ளார்.
20 நூல்களைப் பதிப்பித்துள்ளார்:
பொருநைத் தமிழ், இளந்தமிழ், தீந்தமிழ், பைந்தமிழ், பழகு தமிழ், செந்தமிழ், தேன் தமிழ், தொல் தமிழ், அறிவியல் தமிழ், சமயத் தமிழ், பயன்பாட்டுத் தமிழ், இணையத் தமிழ், இளந்தமிழ், அமுதத் தமிழ், மனித நேயத் தமிழ், இக்காலத் தமிழ், சங்கத் தமிழ், மதிப்பீட்டுக் கல்வி, பொதுத் தமிழ், தமிழ் இலக்கியத்தில் அன்பு நெறி ஆகிய நூல்களைப் பதிப்பித்துள்ளார்.
திருநெல்வேலி மேலும் இலக்கிய அமைப்பின் செயலாளராக வண்ணதாசன் படைப்புலகம், தமிழச்சி தங்கப் பாண்டியன் படைப்புலகம், கலாப்ரியா படைப்புலகம், வண்ணநிலவன் படைப்புலகம், மாலன் படைப்புலகம், ஜோ டீ குரூஸ் படைப்புலகம், தமிழவன் படைப்புலகம் மற்றும் மாதா மாதம் நவீன இலக்கிய உரை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
பன்னாட்டுத் தொல்லியல் கருத்தரங்கம்: ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு முடிவுகளை மத்திய அரசு வெளியிட அழுத்தம் தர, 04.10 2019 அன்று திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தொல்லியல் நோக்கில் உலகத் தமிழர் பண்பாடு எனும் பன்னாட்டுக் கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளராய் நடத்தி 548 பக்க அளவில் 101 ஆய்வாளர்களின் ஆய்வுக் கட்டுரைகளை சதக்கத் ஆய்விதழின் சிறப்புப் பதிப்பாகத் தொல் தமிழ் எனும் நூலாக வெளியிட்டார்.
1.64 k நேயர்கள் பெற்ற மகா தமிழ் எனும் காணொளித் தடத்தைத் தொடங்கி திரு.வி.க., உ.வே.சா, பாரதி, பாரதிதாசனார், மெளனி, ஆத்மா நாம், கி.ரா., வண்ணதாசன், போன்ற படைப்பாளர்கள் குறித்த உரைகளை வழங்கி வருகிறார்.
மாதவம், கணையாழி, புதுப்புனல், தினத்தந்தி, தினமலர், இந்து தமிழ், தினமணி, ஆனந்தவிகடன் போன்ற இதழ்களில் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதி வருகிறார்.
தமிழ் நாடரசின் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் மின் பாட நூல் ஆசிரியராக ஆறு பாடங்கள் எழுதியுள்ளார். மகாபாரதி எனும் வலைப் பூவைத் தொடங்கி சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை பல கட்டுரைகள் படைத்து வருகிறார்.
அகில இந்திய வானொலியின் குரல் தேர்வுக் குழு உறுப்பினராக 10 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்.
பொதிகைத் தொலைக் காட்சி, புதிய தலைமுறைத் தொலைக் காட்சி ஆகியவற்றில் திருச்செந்தூர் சூரசம்ஹாரம், சபரிமலை மகர ஜோதி நேர்முக வர்ணனை ஆகியவற்றை வழங்கி வருகிறார்.
முத்தமிழ்
கலைஞர் நூற்றாண்டு விழாக் கருத்தரங்குகளை முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ஆ.ராசா அவர்களைக் கொண்டு கல்லூரியில் ஒருங்கிணைத்து நடத்தினார். பொதிகைத் தமிழ்ச் சங்கம் நடத்திய கலைஞர் நூற்றாண்டுக் கருத்தரங்கில் பல உரைகள் வழங்கி உள்ளார்.
வகித்த பதவிகள்:
தமிழ் விரிவுரையாளர் (1998-2003)
தமிழ் உதவிப் பேராசிரியர் (தேர்வு நிலை) - 2008-2013
தமிழ் இணைப் பேராசிரியர் மற்றும் தமிழ்த் துறைத் தலைவர் (2006 முதல் இன்று வரை)
கலைப் புல முதன்மையர் (2017-2020)
இளைஞர் நலத் துறை ஒருங்கிணைப்பாளர் - 1999 - 2012
தமிழ்ப் பாடத்திட்டக்குழுத் தலைவர் 2012 முதல் தற்போது வரை
ஐ.எஸ்.ஓ. ஒருங்கிணைப் பாளர் (2024 முதல் தற்போது வரை)
திருநெல்வேலி மேலும் இலக்கிய அமைப்பின் செயலாளர் (2009 முதல் தற்போது வரை)
ஆற்றியுள்ள தமிழ்ப் பணிகள்:
1. எழுத்துப் பணிகள்
2. நூல் எழுதிய பணிகள்
3. பதிப்புப் பணிகள்
4. இளையோர் தமிழ் ஊக்குவிப்புப் பணிகள்
5. தொல்லியல், சுவடியியல் கருத்தரங்கள் உள்ளிட்ட 12 மாநில, தேசிய, பன்னாட்டுக் கருத்தரங்குகள் நடத்திய மை நடத்திய மை
6. ஊடகப் பணிகள்
7. மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளில் தமிழ் ஆய்வுகள் முன்னெடுத்த பணிகள்
8. திருநெல்வேலி தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 10 ஆண்டுகளாக ஆட்சி மொழிக் கருத்தரங்குகளில் சிறப்புரை
9. பொருநை நெல்லை புத்தகத் திருவிழாக்களைத் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தோடு கடந்த 6 ஆண்டுகளாக நடத்தத் துணை புரிவது
பெற்ற பட்டங்கள்:
1 பாரதப் பிரதமரின் சத்பவனா தேசிய விருது (1994)
2. மாண்புமிகு தமிழக முதல்வர் விருது (எட்டாம் உலகத் தமிழ் மாநாடு - தஞ்சாவூர்) - 1995
3. சித்த மருத்துவக் கட்டுரையாளர் விருது. (1996)
4. சென்னை கம்பன் கழகத்தின் சீறாப் புராணக் கட்டுரையாளர் விருது (1995)
5. சென்னை கம்பன் கழகம் - பாரதி லெட்சுமணன் கவிதை விருது (1995)
6. சிறந்த கட்டுரையாளருக்கான தங்கப் பதக்கம் (1992)
7. டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது - சென்னை அரிமா சங்கம் (2008)
8. இளம் கல்வியாளர் விருது - நெல்லை அரிமா சங்கம்
9. மகா சுவாமிகள் ஜெயந்தி விருது (2016)
10. சென்னை கவிதை உறவு வழங்கிய தமிழ் மாமணி விருது (2016)
11. தேனி இலக்கிய மையம் தந்த இலக்கியவியலாளர் விருது (2017)
12. திருநெல்வேலி பொதிகைத் தமிழ்ச் சங்கம் வழங்கிய செந்தமிழின் சொல்வேந்தர் விருது (2022)
13. திருநெல்வேலி அரிமா சங்கம் வழங்கிய சிறந்த தமிழ் ஆய்வாள…
தற்போது ஆற்றிவரும் கல்விப் பணிகள்:
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் ஏழை மாணவர்களுக்குப் போட்டித் தேர்வுப் பயிற்சி.
சதக்கத் அகாதமி மூலம் மாணவர்களுக்குப் போட்டித் தேர்வுப் பயிற்சி
ஒளவையார் அன்பின் கரங்கள், குயில்கள் சமூக சேவை அமைப்பின் மூலம் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு உதவி
திருநெல்வேலி மாநகரக் காவல் துறை அனைத்து மகளிர் ஆலோசனைக் குழு உறுப்பினர்
பேரிடர் மேலாண்மைக்குழு ஒருங்கிணைப் பாளர்
பிற தகவல்கள்:
தமிழால் முடியும், இணையத்தின் மூலம் உலகளாவிய அளவில் தமிழைக் கொண்டு செல்ல முடியும் என்று உலகத் தமிழர்களை ஒன்றிணைப்பது





Comments
Post a Comment